ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் 'தர்பார்'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துவருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படம் குறித்து பாலிவுட் நடிகர் தலீப் தாஹீல் டிவீட் செய்துள்ளார்.
அதில், ''சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். அவர் ஏற்கனவே ரஜினிகாந்துடன் ஆதங்க் ஹே ஆதங்க் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இந்த படம் 1985 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. தற்போது 24 வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.