“இமோஜிக்கே போட்டியா இருக்கு டா உன் மூஞ்சி”- கோமாளி லுக்கை கலாய்த்த பிரபல இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

Mohanraja compliments Jayam Ravi's Comali first look poster compared with an emoji

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 24வது திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா ஹெக்டே, கவிதா ரதேஷ்யம், கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமான முறையில் டெக்னாலஜியால் பாதிக்கப்பட்டு, குழப்பமான மனநிலையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற தோரணையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு சமூக வலைதளஙக்ளில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இயக்குநரும், ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன்ராஜா, கிண்டலடிக்கும் விதமாக ட்வீட்டியுள்ளார்.

அவரது ட்வீட்டில் ‘இந்த இமோஜிக்கே போட்டியா இருக்கு டா உன் மூஞ்சி. மிகவும் எதிர்ப்பார்ப்பை தூண்டுகிறது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என ட்வீட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.