'பேட்ட' படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மும்பையில் நடைபெற்றுவந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். இதனையடுத்து இரண்டு வார இடைவேளைக்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் மே 29 ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. மேலும் எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் என கூறப்படுகிறது.