www.garudabazaar.com

லீக் ஆன 'துணிவு' படத்தின் பாடல் வீடியோ குறித்து பாடகர் வைசாக்கின் பரபரப்பு பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம்  'துணிவு'.

Vaisagh Instagram Story about Thunivu Leaked Songs

Also Read | இரண்டு நாளாக உலகப்புகழ் பெற்ற தமிழக கோயிலில் நடிகை நிமிஷா சஜயன்.. வைரல் போட்டோஸ்

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

Vaisagh Instagram Story about Thunivu Leaked Songs

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

Vaisagh Instagram Story about Thunivu Leaked Songs

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  துணிவு படத்தின் மலேசியா உரிமத்தை அங்குள்ள பிரபல முன்னணி நிறுவனமான மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் கைப்பற்றியுள்ளது.

Vaisagh Instagram Story about Thunivu Leaked Songs

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சில்லா சில்லா வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இச்சூழலில் இந்த பாடலின் சில நொடி ஆடியோ லீக் ஆனது. மேலும் துணிவு படத்தின் காசேதான் கடவுளடா எனும் பாடலின் படப்பிடிப்பு வீடியோவும் லீக் ஆகியுள்ளது. இது குறித்து துணிவு படத்தின் பாடகரும் பாடலாசிரியருமான வைசாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "தயவுசெய்து லீக் ஆன வீடியோக்களை பகிராதீர்கள்" என குறிப்பிட்டுள்ளார். மேலும் #KK (காசேதான் கடவுளடா) என்ற ஹேஸ்டேக்கையும் வைசாக் பகிர்ந்துள்ளார்.

Also Read | வாரிசு படத்தில் S.J. சூர்யா.. தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட வைரல் வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Vaisagh Instagram Story about Thunivu Leaked Songs

People looking for online information on Thunivu, Vaisagh, Vaisagh Instagram Story will find this news story useful.