www.garudabazaar.com

ர்ர்ராகவா... கொங்கு தமிழில் ரெஹனாவின் CUTE ரிக்வஸ்ட்.. ‘காஞ்சனா’ பட Scene-ஐ ரீக்ரியேட் செய்த லாரன்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நடிகர், கோரியோகிராஃபர், இயக்குநர் என பல துறைகளில் இயங்கி வருபவர் ராகவா லாரன்ஸ். இவருடைய அடுத்த படம் 'ருத்ரன்'. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடிக்கிறார்.

super singer rihanna and raghava lawrence recreates Kanjana scene

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா, டைரி போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் இப்படத்துக்கான கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் பூமி எனும் வில்லன் கதாபாத்திரத்தில் சரத்குமார் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டிரெய்லர், ஜோர்த்தாலே மற்றும் பாடாத பாட்டெல்லாம் ரீமிக்ஸ் பாடல் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டு தினத்தன்று  (14.04.2023) வெளியாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தை முன்னிட்டு பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார். இதில் சூப்பர் சிங்கர் பிரபல பாடகி சிறுமி ரிஹானா வருகை தந்தார். ஆரவாரத்துடன் வந்த அவர் காஞ்சனா கோவை சரளான் போல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரிடம் கொங்கு தமிழில் பேசினார்.

முன்னதாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கமல்ஹாசனிடம் விக்ரம் திரைப்படம் குறித்த கேள்விகளை கொங்கு தமிழில் ரிஹானா கேட்டிருந்தார். அண்ணாத்தே ஆடுறார் பாடலையும் கமலஹாசன் முன்னாள் பாடி பிரபலமான இந்த சிறுமி, ராகவா லாரன்ஸிடம், “ராகவா? எப்பவும் என் இடுப்புல நீ ஏறிக்குவ. இப்போது என்னை தூக்கி இடுப்பில் வைத்துக் கொள்” என்று கொஞ்சும் தமிழில் பேசியுள்ளார்.

அதை கேட்டதும் நெகிழ்ந்து போன ராகவா லாரன்ஸ், சிறுமி ரிஹானாவை தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டார். பின்னர் லாரன்ஸுடன், ருத்ரன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாடலை ராகவா லாரன்ஸ் பாடினார். சிறுமி ரெஹானாவையும்  லாரன்ஸ் வெகுவாக பாராட்டினார்.

ர்ர்ராகவா... கொங்கு தமிழில் ரெஹனாவின் CUTE ரிக்வஸ்ட்.. ‘காஞ்சனா’ பட SCENE-ஐ ரீக்ரியேட் செய்த லாரன்ஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

super singer rihanna and raghava lawrence recreates Kanjana scene

People looking for online information on Raghava Lawrence, Rudhran will find this news story useful.