www.garudabazaar.com

கூல் SJ சூர்யா.. மாஸ் லாரன்ஸ்.. Vintage லுக்கில் புழுதி கிளப்பும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் டீசர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக கால் பதித்து பல முன்னணி நடிகர்களுடன் வரை பணிபுரிந்துள்ளவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

Karthik subburaj jigarthanda double x sj suryah raghava lawrence

குறும்படங்கள் இயக்கி மக்கள் மத்தியில் அதிக கவனம் பெற்ற கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம், பெரிய அளவில் அவரை ஹிட் இயக்குனராக மாற்றியதுடன் படத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தது.

இதன் பின்னர், பிரபுதேவா நடிப்பில் மெர்குரி, ரஜினிகாந்த் நடிப்பில் பேட்ட, தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் உருவான மஹான் உள்ளிட்ட சில திரைப்படங்களையும் கார்த்தி சுப்புராஜ் இயக்கி உள்ளார். இயக்குனர் மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் சில படங்களை அவர் தயாரித்தும் வருகிறார்.

மஹான் படத்தை இயக்கி இருந்த கார்த்தி சுப்புராஜ், அடுத்ததாக ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில், இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டிருந்தார்.

Karthik subburaj jigarthanda double x sj suryah raghava lawrence

"Jigarthanda Double X" என குறிப்பிட்டு, இரண்டு துப்பாக்கிகள் சேர்ந்து பார்ப்பதற்கு அவை யானை போன்று இருக்கும் நிலையில் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. Vintage வகையில் இந்த போஸ்டர் இருக்கும் நிலையில், ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டீசர் ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. முதல் பாகத்தில், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த நிலையில், இதன் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் SJ சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிக்கின்றனர்.

Karthik subburaj jigarthanda double x sj suryah raghava lawrence

இந்த நிலையில், தற்போது A Kind Of Teaser என்ற பெயரில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. Vintage லுக்கில் SJ சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் இருக்க, மிகவும் வித்தியாசமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. SJ சூர்யா கோட் சூட் அணிந்த படி ஒரு சாதாரண லுக்கில் இருக்க, மிகவும் Rough ஆக இருக்கிறார் ராகவா லாரன்ஸ். மேலும், ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா ஆகியோர் நேருக்கு நேர் சந்திக்கும் போது, SJ சூர்யா பக்கம் இருந்து ஏராளமானோர் லாரன்ஸை நோக்கி ஓடி வருகின்றனர்.

அவர்கள் அருகே வரும் சமயத்தில்,பழைய Canon கேமராவை எடுத்து லாரன்ஸ் Shoot செய்வது போல டீசர் முடிகிறது. ஜிகர்தண்டாவின் முதல் பாகத்தில், ரவுடியாக இருக்கும் பாபி சிம்ஹா, கடைசியில் சினிமாவில் நடித்து திருந்துவது போல காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அப்படி ஒரு சூழலில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வீடியோவில் கூட, சினிமாவை தொடர்புபடுத்தி காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால், திரைப்படம் இயக்குவது உள்ளிட்ட விஷயங்களை மையப்படுத்தி ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி இருக்கலாம் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Karthik subburaj jigarthanda double x sj suryah raghava lawrence

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படங்களில் மிக முக்கிய திரைப்படமான ஜிகர்தண்டா பார்க்கப்படும் நிலையில், அதன் இரண்டாம் பாகம் குறித்த வீடியோவும் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இதனை எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Karthik subburaj jigarthanda double x sj suryah raghava lawrence

People looking for online information on Jigarthanda DoubleX, Karthik Subburaj, Raghava Lawrence, Sj suryah will find this news story useful.