www.garudabazaar.com

"பூமிய படைச்ச சாமிடா நான்".. ராகவா லாரன்ஸின் அதிரடியான 'ருத்ரன்' பட டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

Raghava Lawrance Rudhran Movie Trailer Released

'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடிக்கிறார்.  பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக பூமி எனும் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார்.

இந்த திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று  (14.04.2023) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது."ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Raghava Lawrance Rudhran Movie Trailer Released

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. ராகவா லாரன்ஸின் பரபரப்பான அதிரடியான ஆக்சன் காட்சிகள் மற்றும் லாரன்ஸ் - பிரியா பவானி சங்கர் இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் டிரெய்லரில் பிரதான அம்சமாக உள்ளன. நடிகர் சரத்குமார் வில்லனாக டிரெய்லரில் தோன்றியுள்ளார்.  இந்த டிரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

"பூமிய படைச்ச சாமிடா நான்".. ராகவா லாரன்ஸின் அதிரடியான 'ருத்ரன்' பட டிரெய்லர்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raghava Lawrance Rudhran Movie Trailer Released

People looking for online information on Priya Bhavani Shankar, Raghava Lawrance, Rudhran will find this news story useful.