www.garudabazaar.com
iTechUS

லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் .... ரீமேக்கான எவர் க்ரீன் கிளாசிக் பாடல்..!! விபரம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ருத்ரன்' படத்தின் முதல் சிங்கிள் பாடல் அப்டேட் வெளியாகி உள்ளது.

Raghava Lawrance Rudhran Movie First Single Song Release Update

Images are subject to © copyright to their respective owners.

'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர்  நடிக்கிறார்.  பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் ருத்ரன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

திரைக்கதை எழுத்தாளர் கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் முக்கியமான வேடத்தில் நடிகர் சரத்குமார் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லனாக சரத்குமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று  (14.04.2023) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது."ருத்ரன்” படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கிளாசிக் படமான 'வீரத்திருமகன்' படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை  ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

Raghava Lawrance Rudhran Movie First Single Song Release Update

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு நடந்தது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக மாஸ்டர் ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார். இந்த பாடாத பாட்டெல்லாம் பாடல் தான் முதல் சிங்கிள் பாடலாக வெளியாக உள்ளது.

Raghava Lawrance Rudhran Movie First Single Song Release Update

People looking for online information on Raghava Lawrance, Rudhran will find this news story useful.