www.garudabazaar.com

பி. வாசு இயக்கத்தில்.. ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2.. படத்தில் இணைந்த பாலிவுட் நடிகை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பி. வாசு இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணைந்துள்ள நிலையில், இது தொடர்பாக அதிகாரபூர்வ பதிவு ஒன்றை தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

kangana ranaut joins chandramukhi 2 raghava lawrence next

கடந்த 2005 ஆம் ஆண்டு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் 'சந்திரமுகி'. பி. வாசு இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், சுமார் 800 நாட்களுக்கு மேல் வரை திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இருந்தது.

சந்திரமுகி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர், இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சந்திரமுகி 2' வை தற்போது பி. வாசு இயக்கி வருகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு, மைசூரில் வைத்து பூஜையுடன் தொடங்கி இருந்தது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் 'சந்திரமுகி 2'  திரைப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதே போல, சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் காமெடி காட்சிகள் மூலம் அதகளம் பண்ணிய வடிவேலு, இரண்டாவது பாகத்திலும் இணைந்துள்ளார்.

kangana ranaut joins chandramukhi 2 raghava lawrence next

கலை இயக்குநர் பணிகளை தோட்டா தரணி கவனிக்கிறார். 'பாகுபலி', 'ஆர் ஆர் ஆர்' பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். ஆர். டி. ராஜசேகர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு மைசூரில் வைத்து நிறைவு பெற்றிருந்தது. மேலும் இந்த படத்தின் BTS புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கூட அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியும் வந்தது.

kangana ranaut joins chandramukhi 2 raghava lawrence next

இந்த நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ளதையடுத்து அவரை வரவேற்று லைக்கா நிறுவனம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. முன்னதாக, சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ளது குறித்து கங்கனா ரனாவத் பதிவு ஒன்றை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், தற்போது அவரை வரவேற்று படக்குழு புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

kangana ranaut joins chandramukhi 2 raghava lawrence next

People looking for online information on Chandramukhi 2, Kangana Ranaut, Lyca Productions, P Vasu, Raghava Lawrence, Vadivelu will find this news story useful.