www.garudabazaar.com

ராகவா லாரன்ஸ் பற்றி நடிகை கங்கனா ரனாவத் எழுதிய நெகிழ்ச்சி பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த போஸ்ட் ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Actress kangana Ranaut post about Raghava Lawrence goes viral

Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரவீந்தர் மகாலட்சுமி வீட்டில் விசேஷம்.. நாதஸ்வரம் தவில் இசைக்க.. அவரே வெளியிட்ட வீடியோ!

கங்கனா ரனாவத்

இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர் கங்கனா ரனாவத். மேலும், சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். இவர், 2008 ஆம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் கங்கனா ரனாவத் பெற்றார். கடைசியாக கங்கனா ரனாவத், ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' படத்தில் நடித்து இருந்தார். கங்கனா ரனாவத் தனது அடுத்த படமான எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார். இந்த எமர்ஜென்சி படத்தை கங்கனா ரனாவத்தே இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 Actress kangana Ranaut post about Raghava Lawrence goes viral

Images are subject to © copyright to their respective owners.

சந்திரமுகி-2

மேலும் தமிழில் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி-2 படத்திலும் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, மனோபாலா, ரவி மரியா ஆகியோரும் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார்.

நெகிழ்ச்சி பதிவு

அதில்,"இன்று நான் சந்திரமுகி படத்தில் எனது பாத்திரத்தை முடிக்கவிருக்கும் நிலையில், நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களிடம் இருந்து விடைபெறுவது மிகவும் கடினமாக உள்ளது. மிகவும் அன்பான குழுவினர். ஷூட்டிங் உடைகளிலேயே இருப்பதால் ராகவா லாரன்ஸ் சாருடன் ஒரு புகைப்படம் கூட எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, காலை ஷூட்டிங்கிற்கு முன்பே, புகைப்படம் எடுத்துக்கொள்ள அவரிடம் அனுமதி கோரினேன். ராகவா மாஸ்டர் எப்போதும் என்னை வியப்படைய செய்யும் நபராகவே இருக்கிறார்.

 Actress kangana Ranaut post about Raghava Lawrence goes viral

Images are subject to © copyright to their respective owners.

கோரியோகிராஃபராக வாழ்க்கையை துவங்கி இன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்கும் ஒரு சூப்பர்ஸ்டாராக உயர்ந்திருக்கிறார். இருப்பினும் எளிமையான மற்றும் அன்பான மனிதராகவும் அவர் விளங்குகிறார். உங்களுடைய பரிவு அற்புதமான நகைச்சுவை உணர்வு மற்றும் எனது பிறந்தநாளுக்காக முன்கூட்டியே நீங்கள் அளித்த பரிசு ஆகியவற்றிற்காக நன்றி சார். உங்களுடன் பணிபுரிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனுடன், ராகவா லாரன்சுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

Also Read | கோலார் தங்க சுரங்கத்தில் பா. ரஞ்சித்.. மாளவிகா பகிர்ந்த 'தங்கலான்' படத்தின் BTS புகைப்படங்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress kangana Ranaut post about Raghava Lawrence goes viral

People looking for online information on Kangana Ranaut, Raghava Lawrence will find this news story useful.