www.garudabazaar.com

"பிகில் விஜய், பில்லா அஜித்".. நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பிய சன்னி லியோன்.. வைரல் வீடியோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரைப்படங்களில் நடித்து இந்தியா முழுவதும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகை சன்னி லியோன்.

Sunny Leone speaks vijay and ajith movie dialogues exclusive

ஹிந்தி திரைப்படங்கள் மூலம் தனது திரை பயணத்தை சன்னி லியோன் ஆரம்பித்தாலும், இன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும், சன்னி லியோன் கவனம் செலுத்தி வருகிறார்.

சன்னி லியோன் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'OMG' படம், டிசம்பர் 30 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. “ஓ மை கோஸ்ட்” (OMG) திரைப்படத்தினை  VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் D.வீரா சக்தி மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் K. சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

நடிகை சன்னி லியோன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, ரமேஷ் திலக், அர்ஜுனன், தங்கதுரை, ஜி.பி. முத்து மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். ஜாவித் ரியாஸ் இசையமைக்க, தீபக் D. மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், Behindwoods சேனல் நடத்திய Fans Festival நிகழ்ச்சியில் சன்னி லியோன் சமீபத்தில் கலந்து கொண்டார். இதில், நடிகர் சதீஷ், TTF வாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தனது தனிப்பட்ட பல விஷயங்கள் குறித்தும் சினிமா குறித்தும் நிறைய சுவாரஸ்ய தகவலை நடிகை சன்னி லியோன் பகிர்ந்து கொண்டார்.

Sunny Leone speaks vijay and ajith movie dialogues exclusive

இந்த நிலையில் கமல்ஹாசன், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் வசனத்தை சன்னி லியோன் பேசிய விஷயமும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறது.

Sunny Leone speaks vijay and ajith movie dialogues exclusive

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த 'பிகில்' படத்தில் வரும் வசனம் ஒன்று திரையில் ஒளிபரப்பப்பட அதனை அப்படியே பேசிக் காட்டினார் சன்னி லியோன். இதே போல, பில்லா 2 படத்தில் டேவிட் பில்லா என அஜித் பேசும் வசனத்தையும், விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பேசும் வசனத்தையும் பேசிக் காட்டினார் சன்னி லியோன். அதே போல, தனது ஃபேவரைட் தென் இந்திய நடிகர் யார் என்ற கேள்விக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என சன்னி லியோன் பதில் அளித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

"பிகில் விஜய், பில்லா அஜித்".. நிகழ்ச்சியில் பட்டையை கிளப்பிய சன்னி லியோன்.. வைரல் வீடியோ!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sunny Leone speaks vijay and ajith movie dialogues exclusive

People looking for online information on Ajith Kumar, Sunny Leone, Vijay will find this news story useful.