www.garudabazaar.com

வாரிசு ஆடியோ லான்ச்ல விஜய் ஹேர் ஸ்டைல்.. ஸ்டைலிஸ்ட் பண்ணது இவரா? வைரல் செல்ஃபி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி வருகிறார்.

Varisu Vijay Selfie with His Hair stylist Jagdish

Also Read | ரொம்ப நாள் கழித்து டூர்.. வெளிநாட்டு கடற்கரையில் கீர்த்தி சுரேஷ்.. வைரல் போட்டோஸ்

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைலை பிரபல ஸ்டைலிஸ்ட் ஜெகதீஷ் வடிவமைத்துள்ளார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் ஜெகதீஷ் வெளியிட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த ஜெகதீஷ், விஜய் நடித்த பிகில், மாஸ்டர், பீஸ்ட் மற்றும் வாரிசு படங்களில் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக பணிபுரிந்தவர் ஆவார்.

Also Read | ஹவுஸ்மேட்ஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்.. களைகட்டிய வீடு.. இதுக்கு தான் Waiting!!.. bigg boss tamil 6

தொடர்புடைய இணைப்புகள்

Varisu Vijay Selfie with His Hair stylist Jagdish

People looking for online information on Hair stylist Jagdish, Thalapathy Vijay Selfie, Varisu, Varisu Vijay, Vijay will find this news story useful.