www.garudabazaar.com

2022-ன் சிறந்த தருணங்கள்.. மனைவியுடன் இருக்கும் UNSEEN போட்டோக்களை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரிஷ் கல்யாண்,  தனது மனைவியுடன் இருக்கும் UNSEEN புகைப்படங்களை வெளியிட்டு 2022-ஆம் ஆண்டின் முக்கிய தருணங்களை  வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார்.

Harish Kalyan Narmada Udayakumar Best Moments of 2022

Also Read | VIDEO: தளபதி விஜய்யோட Turning Point இந்த படம் தான்.. மனம் திறந்த ஷோபா சந்திரசேகர்! EXCLUSIVE

பிக்பாஸ்  முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு மற்றும் ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Harish Kalyan Narmada Udayakumar Best Moments of 2022

சிலநாட்களுக்கு முன் நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை ஹரிஷ் கல்யாண் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்தார்.

சென்னை திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் மஹாலில் இந்த திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Harish Kalyan Narmada Udayakumar Best Moments of 2022

தற்போது ஹரிஷ் கல்யாண் 'டீசல்' என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்  இந்த படத்தில் அதுல்யா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

Harish Kalyan Narmada Udayakumar Best Moments of 2022

மேலும் சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' என்ற படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இப்படத்தில் சித்தி இத்னானி, கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

Harish Kalyan Narmada Udayakumar Best Moments of 2022

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் 2022 ஆம் ஆண்டின் முக்கிய தருணங்களை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளார். அதில், " எனது 2022 ஆண்டின் சிறிய கிளிம்ப்ஸ். என்ன ஒரு நிகழ்வு நிறைந்த ஆண்டு. புதிய அனுபவங்கள் (கடினமான மற்றும் இனிமையானவை), புதிய மனிதர்கள் மற்றும் வாழ்நாள் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டிய நினைவுகள்.

Harish Kalyan Narmada Udayakumar Best Moments of 2022

நான் கற்றுக்கொண்ட பாடங்களையும், நான் அனுபவித்த அனைத்து நன்மைகளையும் முன்னே எடுத்துச் செல்வது. 2023 ஆண்டை கொண்டு வாருங்கள். 💪🏽🔥♥️ இவை அனைத்திலும் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்காக  அனைவருக்கும் நன்றி"

என ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.

Also Read | "நம்மால் முடிந்ததை".. தனது LATEST புகைப்படத்தை பகிர்ந்து புத்தாண்டு வாழ்த்து கூறிய சமந்தா!

தொடர்புடைய இணைப்புகள்

Harish Kalyan Narmada Udayakumar Best Moments of 2022

People looking for online information on Harish Kalyan, Harish Kalyan Narmada Udayakumar, Narmada Udayakumar will find this news story useful.