www.garudabazaar.com

"அந்த சமயத்தில் விஜய் மகிழ்ச்சியில் சிரிச்சுட்டார்".. வாரிசு இசை வெளியீட்டு விழா DJ EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Actor Vijay Smiling for Varisu Audio Launch DJ Mixing

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

Actor Vijay Smiling for Varisu Audio Launch DJ Mixing

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு வாரிசு இசை வெளியீட்டு விழா DJ கௌதம், அர்ஜூன் சேர்ந்து பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில், "வாரிசு இசை வெளியீட்டு விழாவில் வாத்தி கம்மிங் பாடலுடன் சேர்ந்து பழைய இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வசனங்களை இணைத்து மாஷ் அப் உருவாக்கியதாகவும், அந்த மாஷ் அப் ஒளிபரப்பும் போது தளபதி விஜய் மகிழ்ச்சியில் சிரித்து கொண்டிருந்தார். டார்ச் லைட் அடித்த போது விஜய் எழுந்திருந்து பார்த்தது மறக்க முடியாத தருணம்". என்று அர்ஜூன் & கௌதம் கூறினர்.

"அந்த சமயத்தில் விஜய் மகிழ்ச்சியில் சிரிச்சுட்டார்".. வாரிசு இசை வெளியீட்டு விழா DJ EXCLUSIVE! வீடியோ

Tags : Varisu, Vijay

தொடர்புடைய இணைப்புகள்

Actor Vijay Smiling for Varisu Audio Launch DJ Mixing

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.