www.garudabazaar.com

வீடியோ Call-லில் வந்த விஜய்.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அசத்திய பாடகர்கள் EXCLUSIVE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி  'வாரிசு' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Thalapathy Vijay Video Call Before Varisu Audio Launch

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay Video Call Before Varisu Audio Launch

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த 24.12.2022 அன்று நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பாடகர்கள் விருஷா, ஆதித்யா, சத்யா பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளனர். அதில், வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு முதல் நாள் ஒததிகையின் போது தளபதி விஜய் வீடியோ காலில் வந்து ஒத்திகையை பார்த்தார். பின்னர் தீ தளபதி பாடலும் இவர்கள் சேர்த்து பாடட்டும் என்று விஜய் கூறினார். முதலில் தீ தளபதி பாடல் எங்களது லிஸ்ட்டில் இல்லை. 7-8 நிமிடங்கள் இருந்து கால அளவு 11-12 நிமிடங்கள் வரை சென்றது. ஒரே இரவோடு இரவாக தீ தளபதி பாடலை ரெக்கார்ட் செய்து மிக்ஸ் செய்தோம்" என பாடகர்கள் விருஷா, ஆதித்யா, சத்யா கூறினர்.

வீடியோ CALL-லில் வந்த விஜய்.. வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அசத்திய பாடகர்கள் EXCLUSIVE! வீடியோ

Tags : Vijay, Varisu

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Video Call Before Varisu Audio Launch

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.