www.garudabazaar.com

KGF3: கேப்டன் ஹர்திக் பாண்டியாவை சந்தித்த நடிகர் யஷ்.. கூட இவர் வேற இருக்கார்! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேஜிஎஃப் 1 மற்றும் கேஜிஎஃப்  2 ஆகிய இரண்டு படங்களின் மிகப்பெரிய பிரம்மாண்ட வெற்றியை  அடுத்து இப்போது இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகராக யாஷ் மாறியுள்ளார்.

KGF3 Hardik Pandya Meet KGF Actor Rocking Star Yash

சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் ஒரு மத்திய தர குடும்பத்தில் இருந்து வந்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் யாஷுக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'கே ஜி எஃப் சாப்டர்  2' படத்தில் கதையின் நாயகனாக ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு (ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.

KGF3 Hardik Pandya Meet KGF Actor Rocking Star Yash

இந்த படம் இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. முதல் இரண்டு நாளில் இந்த படம் 240 கோடி ரூபாயை வசூலித்தது. இந்த படம் உலகம் முழுவதும் முதல் 4 நாளில் 546 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது.

தமிழ் நாட்டில் மட்டும் கே.ஜி.எஃப் -2  படம் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் (ஸ்கிரீன்) ரிலீசானது. உலகம் முழுவது 10,000 ஸ்கிரினில் ரிலீசாகி 1000 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் யாஷ், அவ்வப்போது தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொள்வார்.

KGF3 Hardik Pandya Meet KGF Actor Rocking Star Yash

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா & அவரது சகோதரர் குர்னால் பாண்டியாவை நடிகர் யஷ் சந்தித்த புகைப்படங்களை KGF3என தலைப்பிட்டு ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

KGF3 Hardik Pandya Meet KGF Actor Rocking Star Yash

People looking for online information on Hardhik Pandya, Krunal Pandya, Yash will find this news story useful.