விஜய் சேதுபதி படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Dec 10, 2019 12:35 PM
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் ‘துக்ளக் தர்பார்’ என்ற திரைப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.
அரசியல் ஃபேன்டஸி டிராமாவா உருவாகவிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அதிதி ராவ் ஹிதாரி நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி கைப்பற்றியுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.