மோகன் ராஜா லுக்கை தொடர்ந்து புதுப்படத்தில் இருந்து வைரலாகும் விஜய் சேதுபதியின் நியூ லுக்!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 27, 2019 05:01 PM
விஜய் சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிக்க விஜய் சந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதனையடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'. இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரித்து வருகிறார்.
இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விவேக், இயக்குநர் மோகன் ராஜா ஆகியோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் மோகன் ராஜாவின் வேடம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது விஜய் சேதுபதியின் ஸ்டைலான லுக் வெளியாகியுள்ளது.