டைரக்டர் மோகன் ராஜாவுடன் இணையும் விஜய் சேதுபதி ? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 21, 2019 05:23 PM
விஜய் சேதுபதி நடித்த 'சங்கத்தமிழன்' திரைப்படம் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா நடிக்க விஜய் சந்தர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதனையடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'. இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரித்து வருகிறார்.
இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இயக்குநர் மோகன் ராஜா நட்புக்காக இந்த படத்தில் தோன்றுவார் என்ற அறிவிப்பை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.