’இந்தியன் 2’வில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதியா? - விவரம் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 25, 2019 11:05 AM
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் வில்லன் குறித்து பரவிய தகவல் மறுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996ம் ஆம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹீட்டானது. இந்நிலையில், சுமார் 23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில், நடிகைகள் பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த், விவேக், ஜெகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
ஷங்கர் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவின. இந்நிலையில், விஜய் சேதுபதி இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கவில்லை என நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படம் வரும் 2021ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.