சமீபத்தில் வெளியான படத்துக்காக பிக்பாஸ் 1,2,3 போட்டியாளர்கள் ரியூனியன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 10, 2019 12:19 PM
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி வெளியான படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்த படத்தில் தினேஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். மேலும் ரித்விகா, ஜான் விஜய், லிஜீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை அதியன் ஆதிரை எழுதி இயக்கியுள்ளார்.
இந்த படத்துக்கு டென்மா இசையமைக்க, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த பிக்பாஸ் சீசன் 1,2,3 போட்டியாளர்கள் குண்டு பட செலிபரிட்டி ஷோ பார்த்தனர் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குநர் சேரன், ஜனனி ஐயர், ஆர்த்தி, ரித்விகா, மும்தாஜ், பாடகி ரம்யா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
ரித்விகா.. அழைப்புக்கு நன்றி..
உங்கள் நடிப்பு பக்குவப்பட்டதாக கதாபாத்திரத்திற்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டதாக இருந்தது. மென்மேலும் தொடரட்டும் உங்கள் பணி...
வாழ்த்துக்கள்.. சிறந்த படைப்பில் இருப்பதே வெற்றிப்பயணம்.... https://t.co/wjcG6fGSKs
— Cheran (@directorcheran) December 9, 2019