விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தில் இணைந்த பிரபல நடிகை
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 06, 2019 07:22 PM
சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் 'சங்கத்தமிழன்' என்ற வெளியாகியிருந்தது. விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்த படத்தை விஜய் சந்தர் இயக்கியிருந்தார். விவேக் - மெர்வின் இணை இந்த படத்துக்கு இசையமைத்திருந்தனர்.

இதனையடுத்து விஜய் சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'யாதும் ஊரே யாவரும் கேளீர்'. இந்த படத்தை வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கி வருகிறார். இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரித்து வருகிறார்.
இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து விவேக், இயக்குநர் மோகன் ராஜா ஆகியோர் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை கனிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.
Happy to welcome onboard Kaniha for MakkalSelvan @VijaySethuOffl ‘s #YaadhumOoreYaavarumKelir.@ChandaraaArts @cineinnovations @roghanth @akash_megha @Actor_Vivek @jayam_mohanraja @nivaskprasanna @ruggyz @designpoint001 @rkajay94 @onlynikil @CtcMediaboy pic.twitter.com/LP7eIksV0U
— Chandaraa Arts (@ChandaraaArts) December 6, 2019