மக்கள் செல்வனுக்கு தமிழக அரசு அளித்த கௌரவம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 15, 2019 03:10 PM
‘மக்கள் செல்வன்’ என ரசிகர்களால் அன்போட அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதுபதிக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வழங்கினார்.

தமிழக அரசு சார்பில் திரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ‘கலைமாமணி விருது’ ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. இத்துடன் 3 சவரன் எடையுடன் பதக்கம், சான்றிதழ் போன்றவை வழங்கப்பட்டது.
இந்நிலையில், அந்த விருது விழாவின் போது கடந்த 2017-ம் ஆண்டிற்கான விருது பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு விருது வழங்கப்படவில்லை. இதையடுத்து, நடிகர் விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை இன்று (நவ.15) தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் வழங்கினார்.