'ஹீரோ' பட பரபரப்பான சண்டைக்காட்சிகள் உருவான விதம் வீடியோவாக இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' திரைப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Sivakarthikeyan and Yuvan Shankar Raja's Hero Spot Light Video is Out

கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் இசைஞானி இளையராஜா ஒரு பாடல் பாடியுள்ளதாகவும், பா.விஜய் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் யுவன் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்தார்.

இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த இந்நிலையில் இந்த படத்தின் ஸ்பாட் லைட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், 'ஹீரோ' படத்தின் சண்டைக் காட்சிகள், பாடல்காட்சிகள் போன்றவற்றின் உருவாக்கம் காண்பிக்கப்பட்டுள்ளது.

'ஹீரோ' பட பரபரப்பான சண்டைக்காட்சிகள் உருவான விதம் வீடியோவாக இதோ வீடியோ