ரஜினிகாந்த் அதிரடி பேச்சு - ''இவ்வளவு வயசாகியும் நடிக்கிறதுக்கு காரணம் இதுதான்''
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 04, 2020 02:53 PM
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாம்ஸ், ஸ்ரீமன், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் பாடல்கள், டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற Pre release Event-ல் பேசிய ரஜினிகாந்த், ''இவ்வளவு வயசாகியும் நான் ஹீரோவாக நடிச்சிட்டிருக்க காரணம் அது உங்களுடைய அபிமானம் மற்றும் வரவேற்பு தான். அதுவே இந்த எனர்ஜிக்கு காரணம்.
இவ்வளவு வயசாகியும் இவ்வளவு எனர்ஜியாவும், மகிழ்ச்சியாவும் இருக்கீங்களே என்று என்கிட்ட கேட்டாங்க. அதற்கு, கொஞ்சமாக ஆசைப்படுங்கள். கொஞ்சமாக கவலைப்படுங்க. கொஞ்சமாக சாப்பிடுங்க, கொஞ்சமாக தூங்குங்க. கொஞ்சம் உடற்பயிற்சி செய்யுங்க. கொஞ்சமா பேசுங்க. இதெல்லாம் செஞ்சா சந்தோஷமா இருக்கலாம்.
தமிழ் ரசிகர்கள் கொடுக்கிற சரிசமமா தெலுங்கு ரசிகர்கள் அளிப்பது என்னுடைய பூர்வ ஜென்ம பாக்கியம்.தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மிகப் பெரிய பிஸ்னஸ்மேன். தற்போது அவர் பாகுபலி மாதிரி பொன்னியின் செல்வன் படத்தை தயாரித்து வருகிறார்'' என்றார்.