‘மாநாடு’ டீமுடன் சிம்புவின் கோலாகல நைட் பார்ட்டி! – வீடியோ இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்புவின் பிறந்த நாள் நேற்று (03.02.2020) அவர் குடும்பத்தினராலும், ரசிகர்களாலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் மாநாடு படத்தில் அவரது பெயர் அப்துல் காலிக் என்று 'மாநாடு' டீம் வெளியிட்டுள்ளது.

STR Simbu Night Birthday party with Maanaadu team

சிம்புவின் மாநாடு திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியைபெற்றுத்தரும் என்று அவர் ரசிகர்கல் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் நேற்று சிம்புவின் பிறந்தநாளையொட்டி நடந்த நைட் பார்டியில் மாநாடு டீமும் மற்ற திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், சுப்பு பஞ்சு அருணாசலம், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் அனைவர் முன்னிலையிலும் சிம்பு கேக் வெட்டி தன் பிறந்தநாளைக் கொண்டாடினார்.

‘மாநாடு’ டீமுடன் சிம்புவின் கோலாகல நைட் பார்ட்டி! – வீடியோ இதோ வீடியோ

Entertainment sub editor