தனுஷின் அசுரன் - சிவசாமி மகனும் ஸ்டைலிஷ் சிம்புவும்! இந்த புதிய காம்போ இணைகிறதா..?
முகப்பு > சினிமா செய்திகள்அசுரன் படத்தில் நடித்த டீஜே நடிகர் சிம்புவை சந்தித்துள்ளார். இருவரும் முக்கியமான பல விஷயங்களை பேசியதாக டீஜே தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் அசுரன். இத்திரைப்படத்தில் தனுஷின் மகன்களாக ஆல்பம் இசை பாடகர் டீஜே அருணாச்சலமும் நடிகர் கருணாஸின் மகன் கென்னும் நடித்திருந்தனர். பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி அசுரன் திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் முருகன் எனும் வேடத்தில் நடித்த டீஜேவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் டீஜே நடிகர் சிம்புவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது சிம்பு, அசுரன் படத்தின் தனது நடிப்பை பாராட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து பணியாற்றுவது குறித்தும் பேசியதாக அவர் தெரிவித்துள்ளார். டீஜே நடிப்பில் தட்றோம் தூக்றோம் எனும் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.