பிரேம்ஜி காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் பதிவு - பிரபலங்கள் ஜாலி கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்காதலர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளப்பக்கங்களில் புகைப்படங்கள், பதிவுகள் என வித்தியாசமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரமாகவே சமூக வலைதளங்கள் களைகட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரேம்ஜி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், Happy Premgi Day என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது DPயில் முரட்டு சிங்கிள் டா என்று தனது புகைப்படத்தை வைத்துள்ளார். இந்நிலையில் பிரேம்ஜியின் இந்த பதிவுக்கு அவரது சகோதரியும் பிரபல ஆடை வடிவமைப்பாளருமான வாசுகி பாஸ்கர், 'Lol காதலர் தின வாழ்த்துகள் bro' என ஜிஃப் ஒன்றை பகிர்ந்துள்ளார். நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி, குழந்தை ஒன்றை சிரித்து விழும் ஜிஃப் ஒன்றை கமெண்ட் செய்துள்ளார்.
பிரேம்ஜி தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்புக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர்.
Happy Premgi Day 🕺
— PREMGI (@Premgiamaren) February 13, 2020