அருண் விஜய் வெளியிட்ட சின்ன வயசு Photo - எங்க அப்பாவோட ஃபர்ஸ்ட் கார்... Memories
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜயகுமாரின் மகனான அருண் விஜய், 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த அவருக்கு, கௌதம் மேனனின் இயக்கத்தில் தல அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் அவர் நடித்த விக்டர் கதாப்பாத்திரம் திருப்புமுனையாக அமைந்தது.

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான 'தடம்' திரைப்படத்தில் கவின், எழில் என உருவ ஒற்றுமையுள்ள இரட்டையராக வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதனையடுத்து Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர், ''என் வாழ்க்கையில நான் தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்த போது, துவண்டு போகமாக அந்த வெறியை என் தொழிலில் காண்பித்தேன். அந்த உழைப்பு தான் என்னை இங்கே கொண்டு வந்திருக்கிறது'' என்று நம்பிக்கை தரும் விதமாக பேசினார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் ட்விட்டர் பக்கத்தில் அவர் சிறுவயதில் ஒரு கார் முன்பு இருக்கும் ஃபோட்டோவை பதிவிட்டுள்ளார். அதில் எனது அப்பாவின் முதல் கார் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அருண் விஜய், பிரசன்னாவுடன் இணைந்து நடித்த 'மாஃபியா' திரைப்படம் வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார்.
It’s Me! 😃 with my dad’s first car!! #PremierPadminiFiat #Memories #AV #Throwback pic.twitter.com/fFSokPesPZ
— ArunVijay (@arunvijayno1) February 2, 2020