விஜய்யின் மாஸ்டர் குட்டி கதை – சிம்புவின் ரியாக்ஷன் கேட்டு கரைந்த இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் படத்தின் குட்டி கதை பாடலை சிம்பு பாராட்டியுள்ளார்.

simbu praises vijay master kutti kathai to arunraja kamaraj

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். அண்மையில் மாஸ்டர் படத்தில் இருந்து விஜய் பாடிய குட்டி கதை பாடல் வெளியாகியாது.

இந்நிலையில் நடிகர் சிம்பு இப்பாடலை பாராட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து குட்டி கதை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பதிவில், ‘ரொம்ப நன்றி எஸ்.டி.ஆர் சார், மிகுந்த அன்போடும் பாசிடிவிட்டியோடும் குட்டி கதை பாடலை பாராட்டினீர்கள். உங்களிடம் இருந்து இதை பெற்றுக்கொண்டதற்காக பெருமைபடுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இப்பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ், கனா எனும் படத்தை இயக்கியுள்ளார். 

Entertainment sub editor