சிம்புவின் ’மாநாடு’ டீம் வெளியிட்ட Grand-ஆன ஷூட் அப்டேட் - Last-ல யாரு First வராண்ணு தான் முக்கியம்’ moment!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு தனது பிறந்தநாளை 'மாநாடு' டீமுடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படங்கள் சிம்பு ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 'மாநாடு' படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்.

STR Simbu Maanaadu grand shoot starts February 19

அதன் படி இந்த படத்தில் இயக்குநர் பாராதிராஜாவின் மகனும், பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் போப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். மேலும் வில்லன் ரோலுக்கு முதலில் பேசப்பட்ட அரவிந்த் சாமிக்கு பதில் எஸ்.ஜே.சூர்யா அந்த கதாப்பாத்திரத்தை ஏற்றுள்ளார். அரவிந்த் சாமி விஜய் இயக்கும் தலைவி படத்தில் பிசியாக இருக்கும் நிலையில் டேட் ஒத்துவராத காரணத்தால் மாநாடு படத்தில் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில்  தற்போது படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி போட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், மாநாடு திரைப்படத்தின் ஷூட் வரும் பிப்ரவரி 19 தேதி க்ராண்டாக தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor