சூப்பர் சிங்கர் பிரகதியின் இன்பாக்சில் குவிந்த மெசேஜ் – ஆத்தி இதுக்கு தான் இந்த அலப்பறையா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2012ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பிரகதி. தன் இனிய குரலால் பல ரசிகர்களை வசப்படுத்திக் கொண்ட இவரை  இயக்குநர் பாலா ‘பரதேசி’ படத்தில் ’செங்காடு’, ‘ஓர் மிருகம்’  பாடல்களை பாட வைத்தார்.

Super Singer Junior Pragathi Guruprassad's Fans sent her n number of messages to buy Trash Can

தொடர்ந்து பல தமிழ் படங்களில் பாடிய அவர் ’வணக்கம் சென்னை’, ‘காதலும் கடந்து போகும்’, ‘கண்ணே கலை மானே’, ’ராட்சசன்’ என 20க்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார். தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குடியிருக்கும் அவர் மாடலிங், ட்ராவலிங், சிங்கிங் என்று பரபரப்பாக இயக்கிக்கொண்டிருக்கிறார்.

தற்போது புதிதாக ஒரு அடுக்ககதுக்கு (Apartment) குடிபெயர்ந்துள்ள அவர் புதுவீட்டை தயார் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.  இந்நிலையில் அவர், வீட்டுக்கு தேவையான Trash Can அதிக விலைக்கு விற்பதாக தன் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். அடுத்த சில மணித்துளிகளில் பிரகதியின் இன்பாக்ஸ் நிரம்பி வழியத்தொடங்கி விட்டது.

சுமார் ஐந்து லட்சம் ஃபாலோவர்களைக் கொண்ட அவர் இன்ஸ்டா கணக்குக்கு ஏராளமானோர் Trash Can வாங்கும் லிங்குகளை இன்பாக்ஸ் செய்துள்ளனர். இந்த வேடிக்கையான நிகழ்வை பிரகதி தன் ஸ்டேட்டஸில் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor