சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை டிரெய்லர் எப்போ தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Sivakarthikeyan's Namma Veettu Pillai Trailer is from Sept 14

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நடராஜ், சூரி, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த படத்தின் டிரெய்லர் நாளை (செப்டம்பர் 14) மாலை 6 மணிக்கு வெளியாகிறது.