சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை'க்காக அனிருத் பாடிய காந்த கண்ணழகி!
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 06, 2019 05:28 PM
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இந்த படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் இசை வெளியீட்டுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது காந்த கண்ணழகி பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை அனிருத், நீட்டி மோகன் இணைந்து பாடியுள்ளனர்.
சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை'க்காக அனிருத் பாடிய காந்த கண்ணழகி! வீடியோ