‘நம்ம வீட்டு பிள்ளை’ சிவகார்த்திகேயனுக்காக களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Udhayanidhi Red Giant Movies Sivakarthikeyan Namma Veettu Pillai

சிவகார்த்திகேயனை ‘மெரினா’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் செய்தவர் பாண்டிராஜ். அதைத் தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனை இயக்கினார். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

கிராமிய பின்னணியில், அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனு இம்மானுவேல், அர்ச்சனா, ரமா, ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியான நிலையில், இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமத்தை நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படம் வரும் செப்.27ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.