சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் இருந்து முக்கிய அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Sivakarthikeyan and Pandiraj's Namma Veettu Pillai Shooting wrapped Wrapped

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மாணுவேல் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நடராஜன், சூரி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனை முன்னிட்டு ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குநர் பாண்டிராஜ், அனு இமாணுவேல் உள்ளிட்டோர் கேக் வெட்டி கொண்டாடினர்.