‘நம்ம வீட்டு பிள்ளை’ சிவகார்த்திகேயனின் மாஸ் குத்து பாடல் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 13, 2019 11:36 AM
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வரும் படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை பாண்டிராஜ் எழுதி, இயக்கி வருகிறார். டி. இமான் இசையமைத்துள்ளார்
இந்த படத்தில் அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதி ராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் இருந்து எங்கள் அண்ணன், மைலாஞ்சி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஜிகிரி தோஸ்த்து என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுத, புதுவைசிதான், ஜெயமூர்த்தி, அந்தக்குடி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர்.
‘நம்ம வீட்டு பிள்ளை’ சிவகார்த்திகேயனின் மாஸ் குத்து பாடல் இதோ! வீடியோ