முகமூடியுடன் ஆக்ரோஷமாக 'ஹீரோ' சிவகார்த்திகேயன் - தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

Sivakarthikeyan and Yuvan Shankar Raja's Hero first Look poster is out

இந்த படத்தில் அனு இமாணுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நடராஜ், சூரி, யோகி பாபு, பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர். 

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'ஹீரோ'. கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை 'இரும்புத்திரை' பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் சிவகார்த்திகேயன் முகமூடியுடன் காட்சியளிக்கிறார்.