''சேரன் சார் சரியா காய் நகர்த்திட்டு இருக்காரு'' - பிரபல இயக்குநர் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் சீக்ரெட் ரூமில் இருக்கும் போது கவின் லாஸ்லியாவிடம் காதல் குறித்து உரையாடியதைக் கேட்டார். அதுகுறித்து பின்பு கவினிடம் கேள்வி எழுப்பினார்.

Director Sai Ramani speaks about Kavin Losliya Cheran, Bigg Boss 3

மேலும், கவின் ஷெரினை நாமினேட் செய்தார் என்பதையும், அவர் என்ன காரணத்துக்காக நாமினேட் செய்தார் என்பதையும் ஷெரினிடேமே தெரிவித்தார். இது பார்வையாளர்களில் ஒரு தரப்பினரிடையே விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து 'சிங்கம் புலி', 'மொட்ட சிவா கெட்ட சிவா' படங்களின் இயக்குநர் சாய் ரமணி Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், 'சேரன் சார் மேல உள்ள  சிலர் அக்கறைல பேசுனாங்க. பிக்பாஸ் சீசன் 3 சக்ஸஸ் ஆனதுக்கு காரணமே சேரன் சார் உள்ள போய் கஷ்டப்படுறாருனு யூடியூப் சேனல்ல பேச ஆரம்பிச்சதுனால தான் என்பது என் கருத்து. அந்த 16 பேர்ல சேரன் சார் எப்படி வின் பண்ணனும்னு சரியா காய் நகர்த்திட்டு இருக்காரு.

எங்க ஃபீல் பண்ணனும், எங்க பாசத்தோட இருக்கணும் எங்க கோவமா இருக்கணும் என்பது அவருக்கு தெரியுது. அது கேம்ஷோ, உள்ள கேமரா இருக்கு என எல்லா தெரிஞ்சு தான் அவர் போயிருக்காரு. அவர் போனதுல தப்பு இல்ல, அவர மாதிரி இயக்குநர்கள் போறதிலையும் தப்பு இல்ல. சேரன் சார் கவின் பேசுவதை ஒத்துக்க மாட்றாருனு சொல்றிங்கள. அப்படிப்பட்ட திருப்புமுனைகள் இருந்தா தான் நிகழ்ச்சி சுவாரஸியமா இருக்கும்.

லாஸ்லியாவிடம் கவின் பேசுவதை Accept பண்ணிருக்கலாம். ஆனா அவரு பண்ணல. ஏனெனில் நிகழ்ச்சி சுவாரஸியமா இருப்பதற்கு அவர் செய்கிறார். Accept பண்ணா அந்த சீன் அப்பவே முடிஞ்சிரும்னு அவருக்கு தெரியும் என்கிறார். எனக்கு தெரிஞ்சு இது ஸ்கரிப்டா தான் இருக்கும்'' என்றார்.

''சேரன் சார் சரியா காய் நகர்த்திட்டு இருக்காரு'' - பிரபல இயக்குநர் விளக்கம் வீடியோ