உன் கூடவே பொறக்கணும் - சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' லிரிக்கல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Un Koodave Lyrical Video is Out from Sivakarthikeyan's Namma Veettu Pillai

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடிக்க, ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நடராஜன், ஆர்.கே.சுரேஷ், சூரி, யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தற்போது உன்கூடவே பொறக்கனும் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை ஜிகேபி எழுத சித் ஸ்ரீராம் இந்த பாடலை பாடியுள்ளனர்.

உன் கூடவே பொறக்கணும் - சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' லிரிக்கல் வீடியோ வீடியோ