'இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம்' சிவகார்த்திகேயனின் புது ரூட்டு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம் தருவேன் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan Recent Press Meet for Mr.local

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ளப் படம் மிஸ்டர் லோக்கல். ரோபோ சங்கர், யோகி பாபு, சதீஷ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

மிஸ்டர் லோக்கல் படம் வரும் 17ம் தேதி ரிலீசாகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம் தருவேன் எனக் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, ' மிஸ்டர் லோக்கல் திரைப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள படம். இந்த படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர்கள் தான்

மக்களுக்கு மிகவும் பிடித்த நிறைய நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். இந்த படம் இயக்குனர் ராஜேஷின் ஸ்டைலில் தான் இருக்கும்.

இது ஒரு ஜாலியான படம். எனவே இதில் வில்லன் என யாரும் இல்லை. அதனால் தான் நயன்தாரா மாதிரியான ஒரு நடிகை தேவை என நினைத்தேன்.வேலைக்காரன் படத்தில் அவரை சரியாக பயன்படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது. அது இந்த படம் மூலம் சரியாகிவிட்டது.

இது நாள் வரை நான் வருடத்துக்கு ஒரு படம் என்று தான் கொடுத்து வந்தேன். ஆனால் இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம் தர திட்டமிட்டுள்ளேன். நல்ல கருத்துள்ள படங்களாக அவை இருக்கும். இந்த புதிய முயற்சி நிச்சயம் ஒர்க்கவுட் ஆகும் என நான் நினைக்கிறேன்', இவ்வாறு அவர் கூறினார்.

'இனி ஆறு மாதத்துக்கு ஒரு படம்' சிவகார்த்திகேயனின் புது ரூட்டு! வீடியோ