மகளிர் கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட கனா ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கனா’ திரைப்படத்தில் நடித்த சுஸ்ரீ திப்யதர்ஷினி என்பவர் டி20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொண்டு பலரது பாராட்டுக்களை குவித்துள்ளார்.

Kanaa Star Sushree Dibyadharshini reaches huge milestone in Women’s T20 Challenge

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கனா’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நலல் வரவேற்பை பெற்றது. அருண்ராஜா குமாரராஜா இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், சத்யராஜ், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியானது.

இந்த படத்தில் கௌசல்யா கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று தனது தந்தையின் கனவை நிறைவேற்றுவார். இதில் இந்திய அணியில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விளையாடிய 10 பெண்களில் பெரும்பாலானோர் நிஜத்திலும் கிரிக்கெட் வீராங்கனைகள் ஆவர்.

அதில், ஒடிசாவைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் வீராங்கனை சுஸ்ரீ திப்யதர்ஷினி பிரதான் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது அவர், மகளிர் டி20 சேலஞ்சில் வெலாசிட்டி என்ற அணிக்காக அட்டகாசமாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். அவரது விளையாட்டிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.