பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் எஸ்கே 16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மிஸ்டர்.லோக்கல்’ படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்திலும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர விக்னேஷ் சிவன் மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இதில் பாண்டிராஜ் இயக்கும் எஸ்.கே.16 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகிகளாக அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர்.. யோகி பாபு, சூரி காமெடி வேடத்திலும், ஆர்.கே.சுரேஷ், நட்டி நட்ராஜ், இயக்குநர் பாரதிராஜா, சமுத்திரக்கனி முக்கிய கதபாத்திரங்களிலும் நடிக்கின்றனர்.
டி.இமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும், வீரசமர் கலை பணிகளை மேற்கொள்கின்றனர்
#SK16BySunPictures shooting begins today!@Siva_Kartikeyan @Pandiraj_dir @Immancomposer @ItsAnuEmmanuel @aishu_dil @offBharathiraja @thondankani @sooriofficial @yogibabu_offl @natty_nataraj @studio9_suresh @nirav_dop @AntonyLRuben @Veerasamar#SK16Pooja pic.twitter.com/dL7N5zXBjL
— Sun Pictures (@sunpictures) May 8, 2019