சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் இணையும் படத்தில் 'புலி' பட பிரபலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராஜேஷ்.எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா இணைந்து நடித்து வருகிற மே 17 ஆம் தேதி வெளியாகவிருக்கிற படம் 'மிஸ்டர்.லோக்கல்'. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் தயாரிக்க, இந்த படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

Natarajan and RK Suresh to act in Sivakarthikeyan Pandiraj's film

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்தன. அதன் ஒரு பகுதியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க, டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜஸ்வர்யா ராஜேஷ்,அனு இமானுவேல், யோகிபாபு, சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நடராஜன் இந்த படத்தில் நடிக்கிவிருக்கிறார். மேலும், பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் இந்த படத்தில் முக்கிய வேடம் ஏற்கிறார். நடிகர் நடராஜன் தளபதி விஜய் நடித்துள்ள, யூத், புலி ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார்.