சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, விவேக், யோகிபாபு, ரோபோ ஷங்கர், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜனவரி, 10 ஆம் தேதி வெளியான படம் 'விஸ்வாசம்'.

தந்தைக்கும், மகளுக்கும் இடையேயான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த படம் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கடந்த மே 1 ஆம் தேதி மாலை முதன் முறையாக சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் என அறிவிக்கப்பட்டது.
அன்று தல அஜித்தின் பிறந்த தினம் என்பதால் அந்த படத்தை காண ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. அப்போது ஒளிபரப்பப்பட்ட அந்த படம் டிஆர்பியில் 1,81,43,000 புள்ளிகளை பெற்றுள்ளது. அதன் மூலம் இந்திய அளவில் நம்பர் 1 என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.