நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வருகிற 17ஆம் தேதி மிஸ்டர்.லோக்கல் படம் வெளியாகவுள்ளது. காமெடி படங்களுக்கு புகழ்பெற்ற ராஜேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து இரும்புதிரை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நேற்று இன்று நாளை பட இயக்குனரின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார், சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகிபாபுவும் சூரியும் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. யோகிபாபு, சூரி இருவரில் ஒருவர் இருந்தாலே அந்த படத்தில் காமெடி களைகட்டும். இந்த நிலையில் இருவரும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகம் செய்த பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தில் இன்னும் பல ஆச்சரியங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
.@yogibabu_offl and @sooriofficial join the cast of #SK16BySunPictures @Siva_Kartikeyan @Pandiraj_dir @Immancomposer
— Sun Pictures (@sunpictures) May 7, 2019
#YogiBabuJoinsSK16 #SooriJoinsSK16 pic.twitter.com/4tgC8u702c