‘நீ நினைச்சா...’- Mr.லோக்கல் மெலோடி பாடல் லிரிக் வீடியோ இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள Mr.லோக்கல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நீ நினைச்சா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

Nee Nenacha song lyric video from Sivakarthikeyan's Mr.Local has been released

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தில் யோகி பாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹிப்ஹாப் தமிழா இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள மெலடி பாடலான  ‘நீ நினைச்சா’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ள இப்பாடலை ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதியுள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் மே.17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

‘நீ நினைச்சா...’- MR.லோக்கல் மெலோடி பாடல் லிரிக் வீடியோ இதோ..! வீடியோ