சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் பாசமலர் 'நம்ம வீட்டு பிள்ளை' எப்போ ரிலீஸ் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 20, 2019 03:06 PM
'மிஸ்டர். லோக்கல்' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'நம்ம வீட்டுப்பிள்ளை'. சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இமாணுவேல் நடிக்க, சிவகார்த்திகேயனின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ், நட்டி நடராஜன், சூரி, யோகி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், இந்த படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. எந்த காட்சிகளும் நீக்கப்படவில்லை. குடும்பப் பொழுதுபோக்கு திரைப்படமான இந்த படம் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.