கீர்த்தி சுரேஷை தொடர்ந்து மற்றொரு முன்னணி ஹீரோயினுடன் கைக்கோர்த்த ‘பேட்ட’ இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Aishwarya Rajesh's next with Karthik subbaraj's Production shoot

‘மேயாத மான்’, ‘மெர்குரி’ ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘Production No.4’ என்ற படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் பல்வேறு விருதுகளை வென்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத்  இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இன்று (செப்.16) நீலகிரியில் தொடங்கியது. கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் வழங்கும் இந்த மர்மம்-திகில்-திரில்லர் படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

இத்தாலிய ஒளிப்பதிவாளர் ரொபர்டோ ஸஸ்ஸாரா ஒளிப்பதிவு செய்ய, ஆனந்த் ஜெரால்டின் படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை மோகன் வசமும், ஆடை வடிவமைப்பு ஜெயலஷ்மி சுந்தரேசன் வசமும், ஒலி வடிவமைப்பு தாமஸ் குரியன் ஆகியோரும் கவனிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே திரைக்கு வரும் வகையில் இப்படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் ஷூட்டிங் பணிகள் கொடைக்கானலில் தொடங்கியது. இந்த படத்தில் தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.