சிவகார்த்திகேயன் பக்கா பிளான் - முதல்ல 'அயலான்' கிளைமேக்ஸ் ஷூட் - அப்புறம் 'டாக்டர்'...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'டாக்டர்' படத்திலும், ரவிக்குமார் இயக்கும் 'அயலான்' படத்திலும் நடித்து வருகிறார். இதில் அயலான் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டில் இருப்பதாக சமீபத்தில் சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராம் பக்கம் வாயிலாக அறிவித்தார்.

Sivakarthikeyan Moves Goa for Doctor Third Shedule After Ayalan Climax Shoot

அயலான் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகின்றன.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டாக்டர்' படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் துவங்கவிருக்கிறதாம். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக படக்குழு நாளை (பிப்ரவரி 12) சென்னையிலுருந்து கோவா கிளம்புகிறதாம்.

Entertainment sub editor